அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 31, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மாணவர்களை எளிதாக கண்டறிவதற்காக தனியார் பள்ளிகளுக்கு மேலாக ஸ்மார்ட் கார்டு என்றும் மின்னணு முறையில் கியூஆர் கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகின்றது.


தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் அடையாள அட்டைகளில் கூட பெயர் மற்றும் பள்ளியின் விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.



ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் மாணவனின் பெயர் மற்றும் குடும்ப விவரங்கள், ரத்த குரூப், அவர் பள்ளியில் விளையாட்டு மற்றும் அனைத்து திறன் போட்டிகளில் கலந்து கொண்டது உள்ளிட்ட மாணவரின் பள்ளி தொடர்பான அனைத்து விவரங்களும் இடம்பெறும் வகையில் மின்னணு முறையில் பதியப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான இந்த ஸ்மார்ட் கார்டு அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி என 115 அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.


நேற்று முன்தினம் அரவக்குச்சி ஒன்றியம் அ.வெங்கடாபுரம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மணவிகளுக்கு தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்

No comments:

Post a Comment