நெல்லை மாவட்டம் கடையம் அருகே தர்மபுரமடம் ஊராட்சி அழகப்பபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இப்பள்ளியில் 37 மாணவர்கள், 38 மாணவிகள் என மொத்தம் 75 பேர் படித்து வருகின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இதில் ஒரு ஆசிரியர், 2018 ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.
தற்போது மற்றொரு ஆசிரியை மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே பள்ளியில் பணியில் உள்ளார்
. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், முறையான கல்வி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
அரசு விதிமுறைப்படி 61 மாணவ, மாணவிகளுக்கு 3 ஆசிரியர் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும். ஆனால் கடந்த ஓராண்டாக இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர்.
தற்போது அதிலும் ஒருவர் விடுப்பில் இருப்பதால் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
இது மாணவ, மாணவிகளின் பெற்றோரை வேதனைக்குள்ளாகி இருக்கிறது.
தலைமை ஆசிரியர் ஒருவரே அனைத்து பணிகளையும் செய்ய வேண்டியுள்ளதால், அவருக்கும் பணிச்சுமை அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூ. மாநில செயற்குழு உறுப்பினர் வேலாயுதம் கூறியதாவது:
அழகப்பபுரம் பள்ளியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கடையம் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தோம்

No comments:
Post a Comment