அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெற தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெற தடை

உபி.,யில் அரசு ஊழியர்கள் மற்ற எவரிடம் இருந்தும், எந்தவிதமான பரிசுப் பொருட்களையும் பெற, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.


சமீபத்தில் ஆலோசனை கூட்டங்களில் ஊழியர்கள் யாரும் மொபைல்போன் எடுத்து வர கூடாது என்றும், பணியாளர்கள் காலை 9 மணிக்கே அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் எனவும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். தற்போது, ஊழியர்கள் யாரும் எந்த காரணத்திற்காகவும் யாரிடமும் இருந்தும் பரிசுப் பொருட்களை பெறக்கூடாது உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சட்டசபைக்குள்ளோ, மற்ற அரசு கட்டிடங்களுக்குள்ளோ எந்த விதமான பரிசுப் பொருட்களுடன் வரும் யாரையும் அனுமதிக்கக் கூடாது. அப்படி வந்தாலும், ஊழியர்கள் யாரும் தங்களின் உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் அவற்றை வாங்கக் கூடாது.

இதனை அனைத்து அமைச்சர்களும் ஊழியர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment