காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 23, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*
24-07-2019

*இன்றைய திருக்குறள்*

குறள் : 811

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
 பெருகலிற் குன்றல் இனிது.

*மு.வ உரை*:
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

*கருணாநிதி  உரை*:
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.

*சாலமன் பாப்பையா உரை*:
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

*பொன்மொழி*

சிக்கல்களை எதிர் கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
- அப்துல் கலாம்

*பழமொழி*

Money makes many things.

பணம் பத்தும் செய்யும்.

*பொது அறிவு*

1.எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
                               *கோலாலம்பூர் (மலேஷியா)*

2.தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
                                *பிராமி வெட்டெழுத்துகள்*.

*அறிவோம் தமிழ்*

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ,

சொல்லின் வகைகள்

பெயர்ச்சொல்

வினைச்சொல்

இடைச்சொல்

உரிச்சொல்

*Today's grammar*

*Adjectives*

RULE 4

Usually for longer adjectives, ‘more’ + adjective is used for comparative form and ‘most’ + adjective is used for superlative form.
Handsome – More Handsome – Most Handsome

Beautiful – More Beautiful – Most Beautiful

Intelligent – More Intelligent – Most Intelligent

Difficult – More Difficult – Most Difficult

RULE 5

Irregular Adjectives: There are some irregular adjectives for which the comparative and superlative form follow no particular rule.
Good – Better – Best

Bad – Worse – Worst

Many – More – Most

Little – Less - Least

*இன்றைய கதை*

* பழமொழி கதை*

*ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்பு*

 கந்தன் என்பவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவன் தனியார் நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றினான். அவனது குடும்பம் விவசாயம் செய்து வரும் ஒரு நடுத்தர குடும்பமாகும். இவனுக்கு 15மைல் தொலைவில் மாமியார் வீடு உள்ளது.

 ஒரு நாள் கந்தனின் தம்பி கதிரவன் சொந்த வேலைக்காக நகரத்திற்கு வரும் சூழ்நிலை உருவானாது. வந்த வேலை முடிந்ததால் அப்படியே அண்ணன் அண்ணி பிள்ளைகளை பார்த்து செல்வோம் என அண்ணன் வீட்டிற்கு வந்தான்.

 அன்று கந்தன் வீட்டிலிருந்தான் ஆகையால் அண்ணா எனும் குரல் கேட்டு வெளியே வந்த கதிரவன் வாடா என அன்போடு வீட்டிக்கு அழைத்து உக்கார வைத்து தனது மனைவியை அழைத்தான் அவள் கொழுந்தனை வாப்பா என்று அழைத்து விட்டு அவள் வேலையை பார்க்க சென்றுவிட்டால். கதிரவனுக்கு பசி அவன் தன் அண்ணியிடம் பசிக்குது அண்ணி சாப்பாடு இருந்தால் கொடுங்க என்று கேட்டான். கொஞ்ச நேரம் கழித்து பழைய சோறும் வெங்காயமும் எடுத்த வைத்தாள். கதிரவனும் சாப்பிட்டு விட்டு அண்ணி நான் புறப்படுகிறேன். என அண்ணியிடம் கூறிவிட்டு.

 அண்ணனிடம் அப்பா உங்களை குடும்பத்துடன் திருவிழாவிற்கு வரச் சொன்னாங்க என்றான். என்னடா தம்பி நம்ம ஊரு திருவிழாக்கு வராம இருப்போமா? என்றான். மறுபடியும் தனது மனைவியை அழைத்தான். கதிரு ஊருக்கு போறானாம காசிருந்தா பஸ்சுக்கு கொடுத்தனுப்புமா என்றான். இங்க என்ன பணம் மரத்திலாய காய்க்குது என்றாள்.

 இந்தா பணத்தை வாங்கிக்கோ என கதிரவன் கையில் திணித்தால் கந்தனும் வாங்கிகோட என்றான். அண்ணியின் தம்பி வீட்டிற்கு வந்தான் அப்படியே அக்காவை பார்த்துவிட்டு போகலாம் என வீட்டின் கதவை தட்டவும் பூவிழி கதவை திறந்து பார்த்து கணவனை நோக்கி என்னங்க என் தம்பி மணி வந்திருக்கான் பாருங்க. போயி கூல்ரிங்க்ஸ் வாங்கியாங்க என்றாள்.

 ஊரில் அம்மா அப்பா மல்லிகா எப்படியிருக்காங்க. என்று விசாரித்தவள், பேசிக்கொண்டே சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை முடித்துவிட்டு கணவனையும் தம்பியையும் உக்காரவைத்து சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்தது அக்காவும் தம்பியும் ஊர் கதை உறவு கதை என பேசிக் கொண்டிருந்தனர். பின் மணி அக்கா மாமா நான் புறப்படுறேன் என கூறி புறப்பட்டான். உடனே பூவிழி இருநூறு ருபாய்களை எடுத்து தம்பியின் பாக்கெட்டில் வைத்தாள்.

 காலையில் நம் தம்பி வந்தபோது அவள் நடந்து கொண்ட விதமும் இப்போது அவள் தம்பி வந்தபோது நடந்து கொண்ட விதமும் கந்தனுக்கு மனதிற்குள் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவிலை. பின் இரவு நேரத்தில் தன் மனைவியிடம் நீ காலையில் நடந்து கொண்டவிதம் சரியில்லை என்றான்.

 உடனே அவள் கதிர் யாருங்க நம்ம புள்ள என் தம்பி ஊருக்கு போய் வந்தவங்களை கவனிக்க வில்லை என்று சொன்னால் யாருக்கு அசிங்கம் உங்களுக்கு தானே என்றாள். இதற்கு அவன் ஒன்றும் பேசவில்லை.

*செய்திச் சுருக்கம்*

🔮கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக அதிகரிப்பு.

🔮காஞ்சிபுரத்தில் சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதர், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் 17 வரையில் நின்ற கோலத்தில் காட்சி தருவார் என்று காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

🔮சென்னையில் பல்வேறு இடங்களில் மழை - மக்கள் மகிழ்ச்சி.

🔮ஜம்மு காஷ்மீர், அமர்நாத் யாத்திரை தொடங்கிய 22 நாட்களிலேயே, கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையான 2.85 லட்சம் எண்ணிக்கையை தாண்டியுள்ளது

🔮பிரான்ஸ் நாட்டில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நீர்முழ்கி கப்பல் பல கட்ட தேடுதலுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது

🔮காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: 7 தங்கம் வென்று இந்தியா சாதனை.

🔮Deadline to file income tax return for FY2018-19 extended to August 31.

🔮Boris Johnson wins Conservative Party leadership, set to become next U.K. Prime Minister.

🔮Virat Kohli retains number one spot in ICC Test Rankings .

தொகுப்பு

T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம் ,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

No comments:

Post a Comment