கால வரையறையின்றி இயங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 2, 2019

கால வரையறையின்றி இயங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

மாணவர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் கால வரையறை இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் பேசும்போது, சில தனியார் பள்ளிகள் காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணி வரைகூட இயங்குகின்றன.

 இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்றார்.
அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, அப்படி நடத்துவது தவறானது.

இது தொடர்பாக துறை ரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment