மாணவர்களுக்கு இலவச புத்தகம் ஐ.பி.எஸ்., அதிகாரி அசத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

மாணவர்களுக்கு இலவச புத்தகம் ஐ.பி.எஸ்., அதிகாரி அசத்தல்

ஜம்மு - காஷ்மீரின் தொலைதுார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ள தேவையான புத்தகங்களை, மூத்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், இலவசமாக வழங்கி வருவது, பாராட்டுகளை பெற்றுள்ளது.


ஒடிசாவைச் சேர்ந்த மூத்த, ஐ.பி.எஸ்., அதிகாரி பசந்த் ரத்; ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பணியாற்றி வருகிறார். இவர், தொலைதுார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, போட்டி தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களை, இலவசமாக வழங்கி வருகிறார்.


தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கம் மூலம், தகவல் தெரிவித்து, மருத்துவ நுழைவு தேர்வான நீட், ஐ.ஐ.டி., நுழைவு தேர்வான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை விரிவுரையாளர் பணிகளுக்கான, 'நெட்' தேர்வுகளுக்கான பயிற்சி புத்தகங்களை, இலவசமாக வழங்கி வருகிறார்.ஒவ்வொரு ஞாயிறும், மாணவர்களை தன் வீட்டுக்கு வரவழைத்து, புத்தகங்களை வழங்குகிறார்.


 மேலும், ஸ்ரீநகரில் உள்ள சந்தையில், ஞாயிறு தோறும் புத்தக கடை அமைத்து, அங்கும் இலவசமாக புத்தகங்களை வழங்கி வருகிறார்.


இதுவரை, ஆயிரக்கணக்கான மாணவர்கள் புத்தகங்களை பெற்றுள்ளனர்.இது குறித்து, பசந்த் ரத் கூறியதாவது:நகர்ப்புறங்களில் வாழும் மாணவர்களை போலவே, கிராமப்புற மாணவர்களும் திறமைமிக்கவர்கள்.


ஆனால், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால், அவர்களின் வளர்ச்சி தடைபடுகிறது.அவர்களுக்கு உதவுவதற்காக தான், புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறேன்.


நேரில் வர முடியாத மாணவர்களுக்கு, 'கூரியர்' சேவை மூலம் புத்தகங்களை அனுப்பி வைக்கவும் முயற்சிகள் செய்து வருகிறேன்.இந்த பணிக்கு, பெரிய மனிதர்கள் பலர் உதவுகின்றனர்.

 தங்கள் பெயர் வெளியில் தெரிய வேண்டாம் என அவர்கள் நினைப்பதால், அது பற்றி கூற முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்

No comments:

Post a Comment