ஒரே போனில் ஆறு கேமரா - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 11, 2019

ஒரே போனில் ஆறு கேமரா

நோக்கியாவின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. விலை குறைப்பு, புதிய மொபைல்கள் அறிமுகம் எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இந்தியாவில் நோக்கியா நிறுவனம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை

இந்நிலையில்தான் பிரீமியம் செக்மென்டில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நோக்கியா 9 ப்யூர்வியூ என்ற இந்த கடந்த பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.


இதில் கேமராதான் முக்கியமான சிறப்பம்சமாக இருக்கிறது. இந்த போனின் பின்புறத்தில் மொத்தமாக ஐந்து கேமராக்கள் இருக்கின்றன.

ஐந்து கேமராக்களின் மூலமாக 240MP படத்தை எடுக்க முடியும்.


முன்புறமாக இருக்கும் கேமரா 20 MP திறன் கொண்டது. இந்த கேமராக்களில் உள்ள லென்ஸ்களை Carl Zeiss நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்போது பிரீமியம் செக்மென்டில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் Snapdragon 855 புராஸசரைப் பயன்படுத்துகின்றன.

 ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பது Snapdragon 845 புராஸசர்தான்.

எனவே இந்த ஸ்மார்ட்போன் வரவேற்பைப் பெறுமா என்பது சந்தேகம்தான். இந்த ஸ்மார்ட்போனின் விலை 49,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 வரும் 17-ம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியா ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது.

No comments:

Post a Comment