இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 28, 2019

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ் மாத ஊதியம் பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு குறித்த நாட்களில் சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து வழங்குவதால் அத்தியாவசிய செலவுக்கு பணம் இன்றி தவிக்கின்றனர்.


இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் மாத ஊதியம் பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஆகிறது.


அரசு பள்ளி ஆசிரியர்களை ஒவ்வொரு வகையாக பிரித்து ஒரு சிலருக்கு முறைப்படியும் ஒரு சிலருக்கு அந்த மாதம் முழுவதும் கூட ஊதியம் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருப்பதை கடந்த சில ஆண்டுகளாக அரசு கையாண்டு வருவது வேதனை அளிக்கிறது.ஒவ்வொரு மாதமும் ஊதியம் குறித்த காலத்தில் கிடைக்காததால் மன உளைச்சல் அடைக்கின்றனர்.


சட்டசபையில் இனிமேல் அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர பணியிடம் ஆக மாற்றப்படும் என்று அரசு கூறியதைக் கேட்டு ஆசிரியர்கள் மிக்க மகிழ்ச்சியில் இருந்தனர். மாத இறுதியில் அரசின் உத்தரவு நடைமுறைக்கு வராததால் ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.


இதுவரை இவர்களுக்கான ஜூலை மாத கொடுப்பாணையோ அல்லது அரசின் நிரந்தர பணியில் பணியிடமாக மாற்றி அமைத்து ஆணையோ வராததால் இந்த ஆசிரியர்கள் ஜூலை மாத ஊதியத்தைப் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையை கலைந்து ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பெறுவதில் உள்ள தேவையற்ற சிக்கல்களை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment