பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிக்கு எம்எல்ஏ தொகுதி நிதியை பயன்படுத்தலாம்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிக்கு எம்எல்ஏ தொகுதி நிதியை பயன்படுத்தலாம்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு வசதிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


 தமிழகத்தில் எம்எல்ஏக் கள் தங்கள் தொகுதி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுகிறது.


இந்த நிதி இதுவரை சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டுதோறும் தலா ₹2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிதியை உயர்த்தி வழங்கிட சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.


 இதனைதொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ₹3 கோடி ஒதுக்கீடு என்று முதல்வர் அறிவித்தார்.


 இந்த நிதியில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் நடப்பு 2019-2020ம் நிதி ஆண்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.


எனவே முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கூடுதலாக உள் கட்டமைப்பு வசதிகள் செய்ய சம்பந்தப்பட்ட உறுப்பினரை தொடர்பு கொண்டு உரிய நிதி ஒதுக்கீடு பெற்று பள்ளிகளுக்கு உரிய உட்கட்டமைப்புகளை மேற்கொள்ள  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


அதன் சார்பாக அறிக்கையையும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment