பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 27, 2019

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி

பள்ளி மாணவர்களுக்கு, தொண்டை அடைப்பான் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது.


முப்பது ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தின் சென்னை, ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில், குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 'பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும். சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, கழுத்துப்பகுதி வீக்கம், நெறி கட்டுதல் நோயின் முக்கிய அறிகுறிகள். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சளியில் ரத்தம் வெளியேறலாம்' என்கின்றனர்
 மருத்துவர்கள்.'


நோயை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


 குழந்தை பிறந்ததில் இருந்து, 15 வயது வரை, உரிய பருவத்தில் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். குறிப்பிட்ட வயதை குழந்தைகள் கடந்த பின், தடுப்பூசி போடுவதை பெற்றோர் பலர் தவிர்த்து விடுகின்றனர்.


நோய் எதிர்ப்பு திறன் குறைந்து விடுவதால், தொண்டை அடைப்பான் உட்பட நோய்கள் தாக்குகின்றன.


ஏராளமான குழந்தைகளுக்கு, தற்போது, தொண்டை அடைப்பான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பள்ளிகளில் படிக்கும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.


இதற்குத் தலைமையாசிரியர்கள், ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்' என, பொது சுகாதாரத்துறையினர் கூறினர்.

No comments:

Post a Comment