மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத 2,648 அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 2,648

1. Skilled Manpower as per specification - 1336
2. Un-Skilled Manpower as per specification - 1342
3. Consultant (Electrical Engineer) - 04
4. Accounts Executive - 02

வயது வரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் திறன் சார்ந்த பணியிடங்களுக்கும், பி.டெக் எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள் கன்சல்டன்ட் பணிக்கும், பி.காம், எம்.காம், எம்.பி.ஏ.நிதி) அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கும் , 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சாராத அலுவலக பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf-5e206875495213e87fe49cd6f968b5d0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2019

No comments:

Post a Comment