மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது

மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இதுவரை இடம் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 8-ந்தேதி தொடங்கியது.


 தொடர்ந்து கலந்தாய்வு நடந்து வருகிறது. அரசு கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதேபோல், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரப்பப்பட்டன.

இந்த ஆண்டு பிளஸ்-2 படிப்பை முடித்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த திருச்சியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவிக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அதுவும் சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.


 இவர் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளில் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் (453) எடுத்தவர்.

வெளியிட தயங்குவது ஏன்?

ஆனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் எத்தனை பேருக்கு இடம் கிடைத்து இருக்கின்றன என்ற பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட அரசு தயங்குவது ஏன்? என்று கல்வியாளர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 8 பேருக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைத்தன.


 அதோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலைக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

அரசு சார்பில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்மூலம் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த மாணவ-மாணவிகளில் எத்தனை பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து இருக்கின்றன? என்பதும் ரகசியமாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment