கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 47
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Plant Operator - 07
2. Laboratory Assistant - 04
3. Fitter - 12
4. Welder - 02
5. Turner - 01
6. Electrician - 04
7. Instrument Mechanic - 08
8. Electronic Mechanic - 04
9. A/C Mechanic - 01

மற்றொரு அறிவிப்பில் நேரடி தேர்வின் மூலம் 4 டெக்னீசியன் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
1.Technician/C (Boiler Operator) - 03
2. Technician/B (Painter) - 01

வயதுவரம்பு: 07.08.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்: Stipendiary Trainees பணிகளுக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.10,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500 வழங்கப்படும்.
Technician - C பணியிடங்களுக்கு மாதம் ரூ.25,500, Technician -B பணியிடங்களுக்கு மாதம் ரூ. 21700 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, துறைவாரியா தேர்வு மற்றுபம் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barc.gov.in அல்லது BARC Kalpakkam Stipendiary Trainees Syllabus PDF Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2019

No comments:

Post a Comment