தேசிய மாணவர், 'ஸ்டார்ட் அப்' கொள்கைக்கேற்ப, கோவை உட்பட, நான்கு இடங்களில், புதிய பாடத் திட்டத்துடன் கூடிய, எம்.பி.ஏ., மற்றும் பி.ஜி.டி.எம்., படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
புதுமை, தொழில் முனைவு, வணிக முயற்சி மேம்பாட்டுடன் கூடிய, இரண்டு ஆண்டு, பி.ஜி.டி.எம்., மற்றும் எம்.பி.ஏ., படிப்பை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், இந்தாண்டு அறிமுகப்படுத்துகிறது. இளம் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், இதற்கானகல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் தெலுங்கானா மாநிலம், வாராங்கல், எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில், பி.ஜி.டி.எம்., படிப்பு, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள குஜராத் தொழில்நுட்ப பல்கலை மற்றும் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள கிராபிக் எரா பல்கலையில், எம்.பி.ஏ., துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், இப்படிப்புகளில் தலா, 30 பேர் சேரலாம்.
இதில் சேர்வதற்கு, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க, இன்று இறுதி நாள். கோவை, வாராங்கல், ஆமதாபாத், டேராடூனில், நுழைவுத்தேர்வு, வரும், 28ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள், 31ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் தகவலுக்கு: www.aicteindia.org.

No comments:
Post a Comment