இன்ஜி., விருப்ப பதிவு இன்று கடைசி நாள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 9, 2019

இன்ஜி., விருப்ப பதிவு இன்று கடைசி நாள்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், முதல் சுற்றுக்கான விருப்ப பாடப்பதிவு, இன்று முடிகிறது.

இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், 177.5 முதல், 200 வரை, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 9,872 பேர், முதல் சுற்று கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விருப்ப பாடப்பதிவு, 8ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாளான, நேற்று வரை, 7,506 பேர், கவுன்சிலிங் கட்டணம் செலுத்தியுள்ளனர்;


 அவர்களில், 6,919 பேர், விருப்ப பாடங்களை பதிவு செய்துள்ளனர்இந்த மாணவர்கள் அனைவரின் சார்பிலும், இதுவரை, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 815 விருப்ப பதிவுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒரு மாணவர், 403 விருப்பங்களை வரிசைப்படுத்தி உள்ளார்


. இன்று மாலை, 5:00 மணியுடன், விருப்ப பதிவு முடிகிறது.

இதற்கிடையில், இரண்டாம் சுற்று மாணவர்களுக்கான, கவுன்சிலிங் கட்டணம் செலுத்தும் வசதி, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று மாலை வரை, 8,934 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாக, கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment