வங்கி ஏடிஎம்மில் பணமெடுக்கும் முன் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம் இது! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 26, 2019

வங்கி ஏடிஎம்மில் பணமெடுக்கும் முன் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம் இது!

நாம் நுழையும் எந்த ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்கவும் முடியாது. சாமானியர்களான நம்மால் அதனைக் கண்டுபிடிக்கவும் முடியாது.

ஆனால் நமது ஏடிஎம் அட்டைகளில் இருந்து பணம் களவாடாமல் தடுக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

பொதுவாகவே காவலாளிகள் இல்லாத ஏடிஎம்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். ஆனால் இப்போதெல்லாம் பல ஏடிஎம்களில் காவலாளிகள் இருப்பதில்லை என்பது அடுத்த விஷயம்.

ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்ததும் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை வேண்டுமானால் நம்மால் சோதிக்க முடியாதே தவிர, பின் எண்ணை அழுத்தும் இடத்துக்கு சற்று மேலே கேமரா ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயம் சோதிக்க முடியும்.

சரி உங்களுக்கு அவ்வளவு நேரம் இல்லையா, ஒன்றும் செய்ய வேண்டாம், உங்கள் அட்டையை உள்ளே நுழைத்து, வலது கையால் பின் எண்ணை பதிவு செய்யும் போது, இடது கையை சரியாக பின் எண் மேலே தெரியாமல் மறைத்தபடி வைக்கலாம். (மேலே கேமரா இருந்தால் அதற்கு எப்படி மறைப்போமோ அவ்வாறு)

இதை மட்டும் செய்தால் போதும், ஏடிஎம் அட்டையில் இருக்கும் மிச்ச சொச்ச பணம் களவாடப்படாமல் தடுக்கலாம். என்னதான் ஸ்கிம்மர் கருவியில் நமது ஏடிஎம் அட்டையின் தகவல்கள் திருடப்பட்டாலும் கூட, கேமராவில் பின் எண் பதிவானால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்பதால் குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம்.

இதை நாங்கள் சொல்லவில்லை. சென்னை காவல்துறையினர் பொதுமக்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்

No comments:

Post a Comment