சைல்டு லைன்' திட்டத்தில், கல்லுாரி மாணவ - மாணவியர் களப்பணியாளர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும், மத்திய அரசின், 'சைல்டு லைன்' திட்டத்தில், 328 மையங்கள் உள்ளன.
குழந்தை திருமணம் தடுப்பு, சித்ரவதைக்குள்ளாகும் குழந்தைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, தமிழகம் முழுவதும், மாவட்டந்தோறும், சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இத்திட்டத்தில், களப்பணியாளர்களாக, கல்லுாரி மாணவ - மாணவியர் செயல்படுகின்றனர்.
கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டில் சேர்ந்த, மாணவ - மாணவியர், தற்போது, களப்பணியாளர்களாக சேர்க்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.மாவட்டத்துக்கு, 100 களப்பணியாளர்களைப் புதிதாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை, பொதுமக்களிடம் ஏற்படுத்துவர்.
'சைல்டு லைன்' அமைப்பினர் கூறுகையில், '1098 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்து, பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் குறித்து புகார் தரலாம்.
குழந்தை திருமணங்கள் தொடர்பாக, அதிக புகார்கள் வருகின்றன. 'ஒவ்வொரு மாவட்டத்திலும், மாதந்தோறும், குறைந்தபட்சம், 10 புகார்களாவது வருகின்றன.
விரைந்து செயல்பட்டு, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துகிறோம்' என்றனர்.

No comments:
Post a Comment