அமாவாசையில் வீட்டு வாசலில் கோலம் போடலாமா....? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 30, 2019

அமாவாசையில் வீட்டு வாசலில் கோலம் போடலாமா....?

வீடு என்பது லட்சுமி வசிக்கும் இடம். இதனால் அவளுக்கு கிரகலட்சுமி என்றும் பெயர் உண்டு. வீட்டில், வாஸ்து புருஷனும் உறைந்திருக்கிறார். அதன் எட்டு மூலைகளிலும் (திசைகளிலும்) திக் பாலகர்கள் உண்டு.

கடவுள் இருப்பிடமான வீட்டை, அனுதினமும் காலையில் சுத்தம் செய்து வாசலில் கோலம் போட வேண்டும். இது வழிபாட்டில் ஒன்று. பசுஞ்சாணியால் சுத்தம் செய்து கோலம் போட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம்.

பூஜை என்பது தினந்தோறும் செய்வதுண்டு. இறை ஆராதனையும், முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லும்


. அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடுவதை தள்ளிப்போட வேண்டும்இது, முன்னோருக்கு நாம் அளிக்கும் முன்னுரிமை அல்லது பெருமையாக கருதாலம்.

ஆகவேதான், அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment