யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஒரு அரசுக்கல்லூரியில் 60 இடங்களும், 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 560 இடங்களும் உள்ளன
. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பித்தல், 3 கல்லூரிகளில் விண்ணப்பம் பெறுதல் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. www.tnhealth.org என்ற இணையதளம் மூலமும் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தனர்,
திருநெல்வேலியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேதா மருத்துவ கல்லூரியில் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.
இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விண்ணப்பம் பெற, இணைதயளத்தில் பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 22ம் தேதிக்குள் தேர்வு குழு தலைவர், இந்தியமுறை மருத்துவம், ஓமியோபதி இயக்குனரகம் அரும்பாக்கம், சென்னை -106 என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமோ அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:
Post a Comment