நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை

நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்ந்தவர்கள் குறித்து எந்த விதமான தகவலும் அரசிடம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்களான செல்வராஜ், மாணிக்கம் தாகூர், ஆ.ராசா ஆகியோர் மத்திய அரசிடம் நீட் தேர்வு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதாவது, என்னென்ன மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியிருக்கிறார்கள். எந்த மாதிரி சலுகையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் பல தற்கொலைகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் நடைபெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை என்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்

அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.


மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு நீண்ட அறிக்கையை வழங்கியுள்ளது.

அதில், தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டுள்ளன.


நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசிடம் எந்த விதமான தகவலும் இல்லை மத்திய அரசு கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த சலுகையும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தற்கொலை மற்றும் மரணம் குறித்து தகவல்களை சேகரித்து வைப்பது மத்திய சுகாதாரத்துறையின் பணி. ஆனால் தற்போது இதுப்போன்ற தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment