காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*
30-07-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள் -122*

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
 அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

*மு.வ உரை:*

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

*கருணாநிதி  உரை:*

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

*சாலமன் பாப்பையா உரை:*

அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

*பொன்மொழி*

உன்னை நீயே பலவீலன் என்று நினைத்துக்  கொள்வது மிகப் பெரியபாவம்.
- சுவாமி விவேகானந்தர்.

*பழமொழி*

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

A young twig is easier twisted than an old tree.

*Important  Used Words*

 Sore புண்

 Old கிழவன், முதுமை

 Hunger பசி

 Loss Of Appetite பசியின்மை

 Mole மச்சம்

*Common grammar mistakes*

Wrong : Although it was raining, but we had the picnic.
Right : Although it was raining, we had the picnic.

Wrong : I enjoyed from the movie.
Right : I enjoyed the movie.

*அறிவோம் தமிழ்*

*கிரந்த எழுத்துகள்*

கிரந்த எழுத்துகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், "ஜ", "ஷ", "ஸ", "ஹ","க்ஷ" போன்ற கிரந்த எழுத்துகள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

*பொது அறிவு*

1. எந்த நாளை விலங்குகள் தொனமாக கொண்டாடுகிறோம்?

*அக்டோபர் 3 ஆம் தேதி*

2.தேசியக் கவி என போற்றப்படுபவர் யார்?

*பாரதியார்*

*இன்றைய கதை*

*மனதில் எழும் குறை*

 வடுகபட்டி என்ற ஊரில் சந்தோஷம் என்ற இளைஞன் இருந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. பின் நகரத்தில் வேலையும் கிடைத்தது. தன் மனைவியுடன் நகரத்தில் தங்கி வேலை பார்த்தான்.

 வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தான். எல்லோரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை! என்று குறை சொன்னாள் மனைவி.

 நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும் என்றான் அவன். அடுத்த நாள் அவன் வேலை முடித்து விட்டு வந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர் என்றாள் அவள்.

 இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள் என்றாள். அச்சமையம் அவனுக்கு பெற்றோர்களிடம் இருந்து ஒரு மடல் வந்தது. அதில்இ ஒரு வாரம் நடக்கும் ஊர்த் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்று எழுதி இருந்தது.

 மனைவியிடம் அந்த மடலைக் காட்டி எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை இருப்பதால் என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா! என்றான். அவளும் அவன் சொன்னதைக் கேட்டு ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள்.

 பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா? என்று கேட்டான் அவன். அங்கே மாடு மேய்க்கும் வேலனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்! என்றாள் அவள்.

 யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும் தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைத்துக்கொண்டு அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் இருக்கிறது. இவளின் குணத்தை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தான் சந்தோஷம்.

நீதி :
எப்போதும் நல்லதையே நினைத்தல் வேண்டும்.

*செய்தித் துளிகள் *

🔮சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை மீண்டும் உயர்த்தப்பட்டது: குறைந்தபட்சம் 271 கி.மீ, அதிகபட்ச 71,792 கி.மீ ஆக அதிகரிப்பு.

🔮தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

🔮உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கன்வார் யாத்திரைக்காக கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் குவிந்துள்ளனர்.

🔮பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருட பழமையான இந்து கோவில் விரைவில் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

🔮India has 2,967 tigers, a third more than in 2014, accordingto results of a tiger census made public on July 29 by prime minister Narendra Modi

Byju Raveendran becomes one of India's youngest billionaires:

🔮ICC World Test Championship will add context to five-day gam ..

*தொகுப்பு*

T.தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

No comments:

Post a Comment