இதுதான் புதிய கல்விக் கொள்கை.! உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 28, 2019

இதுதான் புதிய கல்விக் கொள்கை.! உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்!

புதியகல்விகொள்கை பற்றிய உண்மையான தகவலை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள்..

#புதியகல்விக்கொள்கை: புதிய கல்விக் கொள்கை என்பது பிரதமர் திரு மோடிஜி அவர்கள் பத்து நிமிடத்தில் எழுதி தயாரித்த ஒன்று அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பற்றிய முயற்சிகள் 2015 ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டன.

கடைநிலை கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை அனைவருக்கும் தரமான, சமமான கல்வியை கொடுப்பதற்காகவும் அதில் மக்களையும், செல்வந்தர்களையும் பங்குதாரராக்கி அவர்களையும் அதில் பங்கு பெறுவதற்கான கருத்து கேட்புகள் இணையதளத்திலும், நேரில் கருத்து கேட்பு கூட்ட்கள் நடத்தியும் அனைவரின் கருத்துக்கள் பெறப்பட்டன.இதன் பின் 2015 மே மாதம் அமைச்சரவை செயலாளர் டி எஸ் ஆர் சுப்பிரமணியன் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழு உருவாக்கப்பட்டது. இக்குழு மே 2016 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது, 'தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்' என்ற ஒரு வரைவினை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2017 ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது.

இவ்வளவு நீண்ட கால ஆய்வுகள், தரவுகள், ஆலோசனைகள் பரிந்துரைளை எல்லாம் தாண்டி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது புதிய கல்விக் கொள்கையில்.
முழுமையான வரைவு இன்னும் வரவில்லை. வரைவின் சுருக்கமே வந்துள்ளது.

வரைவு X1 : தேசிய கல்வி ஆணையம் அமைக்கப்படும். இதன் தலைவராக பிரதமர் இருப்பார்.

மேற்கண்ட பரிந்துரை அமலாக்கப்பட்டால் பணத்திற்காக பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் பதவிகளை கோடிகளில் விற்க முடியாது.

பரிந்துரை 1V : இது தொழிற்க்விக்கானது. அனைத்து தொழிற்கல்வியும் உயர் கல்வி அமைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். தனித்து இயங்கும் சட்ட, மருத்துவ, பொறியியல், வேளாண் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படும்.

மறுபடியும் ஒரு முறை நன்றாக மேலே உள்ளதை படித்து பார்க்கவும். புரிகிறதா..?அனைத்து தனியார் தொழிற்கல்வி அமைப்புகளும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். அரசின் கட்டுப்பாட்டில் வராத கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்படும்.

தன்னாட்சி கல்லூரி, சுயநிதி கல்லூரி, தனியார் பல்கலைக்கழகம் என்று லட்சங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு தரமற்ற மாணவர்களை சேர்ப்பது, அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கென்றே தரமற்ற பாடத்திட்டங்களையும், முறையற்ற தேர்வுகளையும் வைத்து அவர்களை தேர்வு பெற வைத்து அனுப்புவது…….. மொத்தமாக எல்லாமே பணால்தான் …!

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தமோ, அவர்களே புலம்புகிறார்கள்.

பலருக்கும் காமதேனுவாக இருக்கும் கல்வி வியாபாரம் மொத்தமும் கிட்டத்தட்ட காலியாகி விடும். கல்வி தந்தைகள், கல்விக் கொள்ளையர்களின்…நிலை அவலமாகிவிடும்.

பரிந்துரை 3 : இது ஆசிரியர் கல்விக்கானது.

ஆசிரியர் தயாரிப்பு திட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும். உயிர் துடிப்புள்ள பல்துறை உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும். வகுப்பு நிலை - குறித்த , பாடங்கள் குறித்த பல்துறை நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நான்காண்டுகள் ஒருங்கிணைந்த இளங்கலைக் கல்வி பாடத் திட்டம் ஆசிரியராவதற்கு முக்கியமான தகுதியாக இருக்கும். தரம் குறைந்த மற்றும் செயல் படாத கல்வியியல் கல்லூரிகள் மூடப்படும்.

இனிமேல் பி.எட் படிப்பு அதாவது ஆசிரியர் கல்லூரி என்று நாலு குட்டிச்சவரை வச்சிக்கிட்டு, எழுத்து பிழையில்லாமல் எழுத கூட தெரியாதவர்களை ஆசிரியராக்க முடியாது. பாடத்திட்டம் சல்லடையாக சலித்து எடுத்தவர்களைத்தான் ஆசிரியராக்கும்.தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்லூரிகளை வைத்து இலட்சங்களையும், கோடிகளையும் அள்ளுபவரின் நிலை இதனால் பரிதாபமாகிவிடும்.

பரிந்துரை 1. f :

ஆசிரியர்கள் உறுதியான வெளிப்படையான முறைகள் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பதவி உயர்வுகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களின் பணி மதிப்பீடு செய்யப்படும். கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆகவும், ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் ஆகவும் அவர்களுக்கு வழி ஏற்படுத்தி தரப்படும்.

இந்த பரிந்துரையும் இதற்கு முன் நீங்கள் பார்த்த எண் 3 பரிந்துரையும் தான் கல்வித்தந்தைகளையும் மற்றும் பலரையும் சேர்த்து கதற வைக்கின்றது.

முதலாவது இந்த பரிந்துரைகள் படி இனி தனியார் பள்ளிகளில் தகுதியற்றவர்களை ஆசிரியராகப் போட்டு மாதம் ஐந்தாயிரம் சம்பளம் கொடுக்கும் அவல நிலை நடக்காது.

சரியான கல்வி தகுதியும் அறிவாற்றலும் உள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர் கல்வியை முடித்து வெளிவர முடியும். அப்படி ஆசிரியர் பயிற்ச்சியை முடித்தவர்களை மட்டுமே தங்களது பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வைக்க முடியும். முறையான ஆசிரியரை வேலைக்கு அமர்த்தினால் அரசாங்க பள்ளிகளில் கொடுக்கும் சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே வேலைக்கு வருவார்கள். தகுதியற்றவர்களை வேலைக்கு வைத்தால் அரசே அந்த பள்ளியை மூடி விடும்.

இரண்டாவதாக பத்தாவது வரை ஆல்பாஸ் என்று ஆசிரியர் வேலைக்கு வந்தவர் வகுப்பில் படுத்து தூங்க முடியாது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அதாவது உதாரணமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அவர்களின் வேலையை பணி மதிப்பீடு மற்றும் அவர்களின் திறனை தேர்வு செய்யும் போது ஒரு ஆப்பு கட்டாயம் இறங்கும்.

இதனால் தான் சில அமைப்புகளும், கல்வி தந்தைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றனபரிந்துரை 4.J :

2020 ம் ஆண்டிற்குள் தேசிய பாடதிட்ட வடிவமைப்பு மறு ஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும். இந்த பாடத்திட்டம் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கிடைக்க வழி வகை செய்யப்படும்.

இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுயேச்சையான கல்வியாளர்களை கொண்ட குழுவிடம் பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் அதிகாரம் வரும் போது தங்கள் இஷ்டப்படி பொய்யான தகவல்களை புரட்சி வரலாறு எனக் குழந்தை பருவத்திலேயே திணிக்க முடியாது. இதனால் போலி அரசியல் இனி இங்கே எடுபட முடியாமல் போகும்.

பரிந்துரை 8.a to l

( Note : இது நீண்ட பகுதியாக இருப்பதால் அதன் சாராம்சத்தின் அடிப்படையில் … சிறிது)

இது அரசு, மற்றும் தனியார் பள்ளிகளை ஆரம்பிப்பதில் அனுமதி வழங்குவது முதல் அதை தொடர்ந்து கண்காணித்தும் ஆய்வுகள் செய்தும் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதற்கு தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறது.

வீட்டு மொட்டை மாடியில் பள்ளி நடத்துவது, பத்தாவது பாஸ் டீச்சர், விளையாட்டு மைதானம் இல்லை, கழிப்பறை இல்லை, குடி தண்ணீர் இல்லை, விளையாட்டு ஆசிரியர் இல்லை….. அவ்வளவு ஏன் குட்டிச்சுவர் கூட இல்லாத பள்ளிகள்… அத்தனைக்கும் இந்த பிரிவு ரிவிட் அடிக்கிறது.

ஒட்டு மொத்த கல்வி வியாபாரிகளுக்கும் விழுந்த மரண அடிதான் புதிய கல்விக் கொள்கை -2019.

இதையெல்லாம் மறைக்கத்தான் இந்தி திணிப்பு, தமிழ் அழிந்து விடும், தமிழன், தமிழ் மொழி, …… அது…. இதுவென… ஊடகங்களின் மூலம் விவாதங்களை நடத்தி மக்களைப் பலரும் திசைத் திருப்புகின்றனர்.அரசு பள்ளிகளில் இலவசமாக கிடைப்பது தரமற்ற கல்வி, தனியாரிடம் சென்றால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலைக்கு மக்களையும், தமிழகத்தையும் கொண்டு வந்து விட்டவர்கள் புலம்புகின்றனர்.

கொடுமையான விஷயம் என்னவென்றால்…. மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் மக்களுக்கு இலவசமாக தகுதியான பாடத்திட்டத்தை வழங்காமல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கல்வித்திறனை ஒரு புறம் நாசமாக்கி விட்டு மறுபுறம் தனியார் பள்ளிகளில் தரமான கல்வியை நமக்குப் பணத்திற்கு விற்கிறார்கள்.

இலவசமாக நமது குழத்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வி, மூன்றாவது மொழியறிவை தடுத்து, அதை பணம் உடையவர்கள் மட்டும் அவர்களிடம் விலை கொடுத்து வாங்குவதை சட்டப்பூர்வமாக்கி வைத்துள்ளனர்.

மூன்றாவது மொழியை கற்கும் அளவிற்கு நமது குழந்தைகள் இல்லை என்று ஒரு அறிவற்ற காரணத்தை முன்வைக்கின்றனர் சிலர்.

இதை விட முட்டாள்தனமான வாதம் வேறு எதுவும் கிடையாது. பணக்காரக் குழந்தை மூன்று மொழி படிக்கும் போது குப்பன், சுப்பன் வீட்டு குழந்தை படிக்காதா…? பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மட்டும் கூடுதலான அறிவை வைத்து ஆண்டவன் படைக்கிறானா என்ன….?

தொழிற் கல்வி மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் கடுமையாக எதிர்க்கின்றனர் இந்த நாசகாரர்கள். அதற்கு இவர்கள் கூறும் காரணம் தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பது.கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா இதை சொல்ல….? அப்படியானால், இவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டம் வெறும் குப்பை என்று அவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்களா?

2019 - 20 பட்ஜெட்டில் தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.28,757.62 கோடி. இதை ஒரு புரிதலுக்காக 28,000 கோடிகள் என வைத்துக்கொள்ளலாம்.

தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்தது. 2015 புள்ளி விபரப்படி இது நாற்பத்தி ஐந்து லட்சமாக குறைந்து விட்டது. காரணம் தரமற்ற கல்வி என பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நிராகரித்து விட்டனர்.

இது இப்போது மேலும் குறைந்திருக்கும். ஒரு கணக்கீட்டிற்காக 45,00,000 மாணவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு மாணவனுக்கு ஆகும் செலவை கணக்கிடுங்கள்.

280,000,000,000 ÷ 45,00,000 = 62,222 அதாவது என்னதான் குருட்டு கணக்காக பார்த்தாலும் ஒரு மாணவனுக்கு வருடம் ஒன்றிற்கு அரசு செலவிடும் தொகை அறுபதாயிரம்.

ஒரு மாணவனுக்கு அறுபதாயிரம் அரசு செலவு செய்தும் அவன் போட்டி தேர்வுக்கு தயாராக முடியாத ஒரு தரமற்ற கல்வியைத்தான் கொடுக்க முடிகிறது என்றால் பிறகு எதற்கு சமச்சீர் கல்வி…? எதற்கு அரசு பள்ளிக் கல்வி துறையை நடத்த வேண்டும்….?

இதில் பாதி தொகையை அதாவது முப்பதாயிரத்தை மாணவனிடம் கொடுத்தால் அவன் தனியார் பள்ளியில் சேர்ந்து தரமான கல்வியை பெற்று விட்டு போகிறான். அரசிற்கும் வருடத்திற்கு பதினான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் சிபிஎஸ்சி மூலம் தரமான கல்வியுடன் மூன்றாவது மொழி கற்கும் உரிமை உண்டா என்ன..? ஏன் அது ஏழையின் குழந்தைக்குக் கிடைக்கக் கூடாதா..?

1 comment:

  1. Unga oorla dhan 30000 ku private school la padikka mudium nu nenaikuren mrs arivali

    ReplyDelete