இந்த ஆண்டில் 2வது முறையாக நேற்று முன்தினம் நள்ளிரவு பூரண சந்திர கிரகணம் தோன்றியது. அடுத்ததாக 2021ம் ஆண்டுதான் தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்
.சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல், சந்திரனில் விழும் நிகழ்வே சந்திர கிரகணம். சூரியன் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் சந்திரன் தெரியாது. பூமியின் நிழல் விழும்போது, சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக மறையும.
பூமியின் ஒரே நேர் கோட்டிலிருந்து விலக துவங்கியதும், சிறிது சிறிதாக சந்திரனின் மீதிருந்த நிழல் விலகி முழு சந்திரன் தெரியும்
.இந்நிலையில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது, பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மட்டுமே மறைத்தது.
சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் வராததால், பாதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதன்படி, பூரண சந்திரகிரகணம் நள்ளிரவு, 12.13 மணிக்கு தொடங்கியது.
அதிகாலை 4:30 வரை சந்திர கிரகணம் நீடித்தது.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்அமெரிக்க கண்டங்களில், பல இடங்களில் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் மக்கள் பார்க்க முடிந்தது.
சந்திர கிரகணத்தை காண வசதியாக சென்னை பிர்லா கோளரங்கிலும், நள்ளிரவில் பலர் குடும்பத்துடன் வந்து சந்திரகிரகணத்தை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
ஆனால் சென்னையில் மேகமூட்டம் காரணமாக சந்திரகிரகணத்தை பார்க்க முடியாத சூழல் இருந்தது. அடுத்ததாக 2021ம் ஆண்டு முழு சந்திரகிரகணம் தோன்றும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி ஒரு சந்திர கிரகணம் தோன்றியது. நேற்றுமுன்தினம் இரவு 2வது முறையாக சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது

No comments:
Post a Comment