இந்திய அணியில் தமிழக மாணவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 21, 2019

இந்திய அணியில் தமிழக மாணவி

பிஃபா 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியம்மாள் இடம்பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலமுருகன். இவரது மகள் மாரியம்மாள்.


 இவருக்கு இளம் வயதில் கால்பந்தாட்டத்தின் மீது ஏற்பட்ட மோகத்தால் இவரது தந்தை நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்த்தார். நாமக்கல் அரசுப் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார்.


 இங்கு பள்ளி படிப்புடன் தீவிர கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட்ட வந்த மாரியம்மாள் துவக்கத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி மாநில அளவிலான அணியில் இடம்பிடித்து தனது திறமையினால் தமிழ்நாடு அணியில் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிகளில் பல வெற்றிக்கு துணை நின்றார்



.இந்தியாவில் 2020ஆம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிஃபா உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.


 இந்தத் தொடருக்கான இந்திய அணியில் மாரியம்மாள் இடம்பிடித்துள்ளார்.

இது குறித்து மாரியம்மாள் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், 'எனது அண்ணன் இளம் வயது முதலே கால்பந்தாட்ட வீரராக விளங்கியதை கண்டு எனக்கு கால்பந்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.


இதனையடுத்து நான் நாமக்கல்லில் உள்ள தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று விளையாடி வருகிறேன்.



மேலும் எனது பயிற்சியாளர் கோகிலா அளித்த பல்வேறு தொழில்நுட்ப பயிற்சியின் வாயிலாக மாவட்ட, மாநில அளவில் சிறப்பாக விளையாடினேன்.


 அதன் விளைவாக அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகளில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.


 நான் தொடர்ந்து சிறப்பான பயிற்சி மேற்கொண்டு இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment