இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்போர், நாளை முதல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்
.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கு, கவுன்சிலிங் முடிந்தது.பொதுப்பிரிவினருக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கைகள், நாளை துவங்க உள்ளன. இதில், 1.01 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
அவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், நான்கு கட்டங்களாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.முதல் சுற்றில், 200 முதல், 178 வரை, கட் - ஆப் மதிப்பெண் பெற்ற, 9,872 பேர் பங்கேற்கின்றனர்.
இவர்களுக்கான கவுன்சிலிங் கட்டணம் செலுத்தும் வசதி, நாளை ஆன்லைன் வாயிலாக துவங்குகிறது. ஜூலை, 10, மாலை, 5:00 மணிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.
விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளை, ஆன்லைனில் பதிவு செய்யும் அவகாசம், வரும், 8ல், துவங்க உள்ளது; 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஜூலை, 11ல் இடங்கள் ஒதுக்கப்படும்;
12ம் தேதிக்குள் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீட்டை பெறலாம். கூடுதல் விபரங்களை, www.tneaonline.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

No comments:
Post a Comment