ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களில் பணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 28, 2019

ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களில் பணி

ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களில் தரவு உள்ளீட்டாளர் பணிக்கு (Data Entry Operator), இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) நியமிக்கப்பட்ட NSEIT LTD நிறுவனத்தின் தேர்வில் தேர்ச்சி அவசியம்.


இதில் கலந்து கொள்ள விரும்பும் 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றோர், http://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.365 செலுத்தி ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் .
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களது விவரங்களை admin@fcosservices.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


இதன்மூலம் அவர்கள் எல்காட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் ஆதார் சேர்க்கை மையங்களில் அவுட்சோர்சிங் முகமை மூலம் பணியமர்த்த வாய்ப்புள்ளது.

1 comment: