சூர்யா பேசியதை ரஜினி பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 22, 2019

சூர்யா பேசியதை ரஜினி பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை நடிகர் ரஜினிகாந்த் பேசி இருந்தால் மோடி கேட்டிருப்பார் என்று பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை குறித்து தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார்.


 சூர்யாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியது. சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு சில எதிர்க்கருத்துகள் தெரிவித்தாலும், டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித், வைரமுத்து உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர்


இந்நிலையில்  சென்னையில் நடைபெற்ற காப்பான் படத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கபிலன் வைரமுத்து, '' புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை நடிகர் ரஜினிகாந்த் பேசி இருந்தால் மோடி கேட்டிருப்பார்' என தெரிவித்தார்.


மேலும் பேசிய அவர், சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கையை கேட்ட சரஸ்வதியே தன் வீணையை தண்டாயுதமாக மாற்றிவிட்டாள் என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment