இரு மாநிலங்களில் விண்ணப்பித்தால் மருத்துவ சேர்க்கையில் தகுதியிழப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 9, 2019

இரு மாநிலங்களில் விண்ணப்பித்தால் மருத்துவ சேர்க்கையில் தகுதியிழப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கையில், இரு மாநிலங்களில், மாணவர்கள் யாராவது விண்ணப்பித்திருப்பது தெரிய வந்தால், அவர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, எம்.பி.பி.எஸ்., - 3,968; பி.டி.எஸ்., - 1,070 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, எம்.பி.பி.எஸ்., - 852; பி.டி.எஸ்., - 690 இடங்கள் உள்ளன.



 இதற்கு, 'நீட்' நுழைவு தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 31 ஆயிரத்து, 353 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 25 ஆயிரத்து, 651 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

சென்னை, ஓமந்துாரார், அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கவுன்சிலிங் நடைபெறுகிறது. நேற்று முன்தினம், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 46 எம்.பி.பி.எஸ்., மற்றும் இரண்டு பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பின.


 பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது.இதில், அஸ்வின் ராஜ், ஸ்ரீநாத், தன்யா உள்ளிட்ட, முதல் பத்து இடங்களை பெற்றவர்கள், சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், கல்லுாரி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: நாட்டிலேயே தமிழகத்தில் தான், அரசு மருத்துவ கல்லுாரிகள் அதிகம் உள்ளன.


அதேபோல, எம்.பி.பி.எஸ்., இடங்களும் அதிகளவில் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும், மருத்துவ படிப்பு இடங்களை அதிகரித்து வருகிறோம். இந்தாண்டு மட்டும், 350 எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரித்துள்ளோம்.வெளிப்படை தன்மையுடன், கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.


கடுமையான விதிமுறைகளின்படி, எந்தவித இடர்பாடும் இல்லாமல் நடத்துகிறோம்
வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், இடங்கள் பெறுவதை தவிர்க்கவே, பெற்றோர் மற்றும் மாணவர்களின் சான்றிதழ் பெறப்படுகிறது.


மாணவர்கள் யாராவது, இரு மாநிலங்களில் விண்ணப்பித்திருந்தால், அவர்கள் தகுதி இழந்து விடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்றும் நடைபெறுகிறது. இன்றைய கவுன்சிலிங்கிற்கு, 1,487 மாணவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment