கல்விக்காக கண் திறந்த இளைய காமராஜரே!!! போஸ்டரில் கலக்கும் சூர்யா!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

கல்விக்காக கண் திறந்த இளைய காமராஜரே!!! போஸ்டரில் கலக்கும் சூர்யா!!

அகரத்தின் முதல்வரே! இளைய காமராஜரே! மக்கள் மனதை கவர்ந்த அப்துல்கலாம்! என சூர்யாவில் போஸ்டர்கள் மதுரையை கலக்கியுள்ளது.



சமீபத்தில் நடிகர் சிவகுமார் அரக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கையை விமர்சித்தும், நீட் தேர்வு மற்றும் பலவிதமாக நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராகவும் அவர் பேசினார்.
இதனால் சூர்யாவின் பேச்சுக்கு ஆளுங்கட்சி தரப்பினர் மற்றும், பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.


அவருக்கு ஆதவாகவும் சில கட்சியினர் பேசினர். இதன் பின்னர் நடிகர் சூர்யா தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கும், கல்விக்கொள்கை பற்றி ஏன் பேசினேன் என்ற விளக்கத்தையும் அறிக்கையாக வெளியிட்டார்.


அதோடு புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டும் பட்சத்தில் சூர்யா சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள தயாராகி வருவதாக தகவல்களும் வெளியாகியது. இந்நிலையில் நேற்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வட்டாரத்தில் போஸ்டர்கள் கலைக்கட்டியுள்ளது.


அந்த போஸ்டர்களில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி தந்த அகரத்தின் முதல்வரே! விவாசாயிகளை காக்கும் கடவுளின் மறுபிறப்பே! கல்விக்காக கண் திறந்த இளைய காமராஜரே! வாழ்க பல்லாண்டு!! என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது

No comments:

Post a Comment