மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி நாளில் வகுப்புகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 3, 2019

மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி நாளில் வகுப்புகள்

மாணவிகளுக்கு மாணவர்களால் ஏற்படும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தனித்தனி நாளில் வகுப்புகளை நடத்தி வந்தது மேற்கு வங்கப் பள்ளி நிர்வாகம்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஹபிப்பூர் பகுதியில் உள்ள கிரிஜா சுந்தரி வித்யா மந்திர் பள்ளியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து கடுமையான விமரிசனம் வந்ததை அடுத்து, முடிவை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மாணவிகளுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கும் பள்ளி வகுப்பறைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பள்ளி நடப்பது சீராக இருந்ததாகவும் நிர்வாகம் கூறியிருந்தது.

இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருகாலும் அனுமதிக்க முடியாது. உடனடியாக இரு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார்

No comments:

Post a Comment