கார்ப்பரேட்டுகளுக்கு கைகொடுக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 26, 2019

கார்ப்பரேட்டுகளுக்கு கைகொடுக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது

இருபது பேருக்கு குறைவான மாணவர்கள் உள்ள  அரசு பள்ளிகளை மூட புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. இதனால்,  இலவச கல்வியே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது’’ என்று கேரள மாநில  முன்னாள் கல்வி அமைச்சர் பேபி கூறினார்.

கேரள மாநில முன்னாள் அமைச்சர் பேபி நிருபர்களிடம் கூறியதாவது:


புதிய வரைவு கல்விக்கொள்கையை வெளியிட்ட மத்திய அரசு ஏ.பி.வி.பி அமைப்பிடம் மட்டுமே விவாதம் நடத்தியுள்ளது.


ஜனநாயக ரீதியாக பல மாணவர் அமைப்புகள் உள்ளன, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என யாரிடமும் இதுகுறித்து கருத்து கேட்கவில்லை. 20 பேருக்கு குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளை மூட இந்த புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது.


 இதனால், இலவச கல்வியே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு கைகொடுக்கும் வகையில் இந்த கல்விக்கொள்கை உள்ளது.

பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மொழிகள் உள்ள நாட்டில் வேறெந்த மொழியிலும் இந்த கல்விக்கொள்கை வெளியிடப்படவில்லை என்பது கண்டனத்திற்கு உரியது.

உடனடியாக இந்த கல்விக்கொள்கை திரும்பப்பெற வேண்டும். அனைத்துதரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும்.


கேரளாவில்  அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.


இதுபோன்ற கல்விக்கொள்கைகளைதான் மத்திய அரசு கடைபிடிக்க வேண்டுமே தவிர கல்வியை கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பதல்ல. இவ்வாறு பேபி கூறினார்.

No comments:

Post a Comment