எங்களுக்கும் ஒரு மாவட்டம் வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 20, 2019

எங்களுக்கும் ஒரு மாவட்டம் வேண்டும்

மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி 2வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


 நெல்லையில் இருந்து தென்காசியையும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் தனியாக பிரித்து புதிய மாவட்டங்களாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18ம்தேதி அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது


. காரணம் நாகையில் இருந்து மயிலாடுதுறையை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் 20 ஆண்டாக போராடி வருகின்றனர்.


இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே, இதை கண்டித்தும், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்ககோரியும் அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இந்நிலையில், நேற்று 2-வது நாளாக குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகாக்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


சீர்காழியில் 1200 கடைகள், வைத்தீஸ்வரன் கோவிலில் 300 கடைகள், கொள்ளிடம், தைக்கால், புதுப்பட்டினம், மாதானம், பழையாறு பகுதிகளில் 2000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி முதல்வருக்கு 1 லட்சம் தபால் கார்டு அனுப்பும் போராட்டத்தை சீர்காழியில் வர்த்தகர்கள் தொடங்கினர்.


இதையொட்டி, வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் முன்னிலையில், சீர்காழி மணிக்கூண்டு அருகில் தபால்கார்டுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தபால் கார்டுகளை முதல்வருக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்

No comments:

Post a Comment