அதிக தொகை டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

அதிக தொகை டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்?

அதிக தொகை டெபாசிட் செய்யப்படுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக மதிப்புள்ள தொகையை டெபாசிட் செய்ய பான் எண்ணை குறிப்பிடும் நடைமுறை தற்போது உள்ளது. போலி பான் எண் களை குறிப்பிடும்போது அதிகளவு பணப் பரிவர்த்தனைகளைக் அடையாளம் காண முடியாத சூழல் ஏற்படுகிறது.



இதைத் தவிர்க்க பான் எண்ணுடன், ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிடுவதால், டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் யார் என தெரிந்து கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.


அதற்கு, பயோமெட்ரிக் கருவி மூலம் அல்லது ஆதார் அடிப்படையில் செல்போனுக்கு ஒருமுறை அனுப்பப்படும் ரகசிய எண் ணை வைத்து டெபாசிட் செய்யும் முறையை கொண்டு வர திட்டமிடப் பட்டு வருகிறது


டெபாசிட் செய்யப்படும் தொகை வரம்பு குறித்து முடிவெடுக்கப்படாத நிலையில், ஆண்டுக்கு 20 அல்லது 25 லட்சம் ரூபாய் முதல் செய்யப்படும் டெபாசிட்களுக்கு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment