மத்திய அரசின் புதிய கல்வி கொள்ைக மீது கருத்துகளை பதிவு செய்து அதை திருத்தி, ஏழை மாணவர்கள் உயர துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா மீண்டும் ேபார்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த விழாவில் பேசிய சூர்யா, ‘நீட் மற்றும் புதிய கல்வி கொள்கையால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வியில் இருந்து துடைத்து எறியப்படுவார்கள். எனவே, நீட்டை ரத்து செய்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும்’ என்று ஆவேசமாக பேசினார்
. அவரது பேச்சுக்கு அதிமுக அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கல்வி பற்றி பேச சூர்யாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது பேச்சில் உடன்பாடு இருப்பதாக சொன்னார்.இந்நிலையில், நேற்று டிவிட்டரில் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு. பெற்றோரை இழந்து, விண்ணப்பம் வாங்கக்கூட முடியாமல் தவித்த பெண், இன்று டாக்டராகி இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார்.
ஆடு ேமய்க்கும் பெற்றோரின் மகள், எம்பிபிஎஸ் முடித்து கல்வி மேற்படிப்பு படிக்கிறார். கல் உடைப்பவரின் மகன் டாக்டராகி, கிராமங்களில் பணியாற்றுகிறார்.
நீட் தேர்வு இருந்திருந்தால், இவர்கள் யாரும் மருத்துவர்களாகி இருக்க முடியாது. எல்லாவிதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு என்ற கோட்பாடு உயர் கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்துவிடும்.
இதுகுறித்து நான் பேசியபோது, கல்வியை பற்றி பேச உனக்கு (சூர்யா) என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்துக்கள் வந்தது.
அதேவேளையில், ஏழை மாணவர்களின் நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்தவர்களுக்கு நன்றி.
மத்திய அரசின் கல்வி வரைவு அறிக்கை மீதான ஆக்கப்பூர்மான கருத்துகளை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் உள்பட அனைவரும் https://innovate.mygov.in/new-education-policy-2019 என்ற இணையதளத்தில், இம்மாத இறுதிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசும் இந்த கருத்துகளை அறிந்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஏழை மாணவர்களுக்கு கல்விதான் உயரே பறப்பதற்கான சிறகு. அது முறிந்துபோகாமல் இருக்க அனைவரும் துணைநிற்போம். இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment