இப்படியும் ஒரு ஊர் நம் தமிழகத்தில் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 21, 2019

இப்படியும் ஒரு ஊர் நம் தமிழகத்தில்

திருமங்கலம் அருகே காவல் தெய்வத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் யாருமே மாடி வீடு கட்டாத அதிசய கிராமம் உள்ளது.


நாகரீம் வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில், நகரத்திற்கு இணையாகவே கிராமங்களிலும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அடுக்கு மாடி வீடுகள் கூட கட்டப்பட்டு கிராமங்கள் அழகு பெற்று வருகின்றன.


இப்படிப்பட்ட சூழலில் மாடி வீடுகளே இல்லாத அதிசய கிராமம் ஒன்று மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? திருமங்கலத்திலிருந்து சேடபட்டி செல்லும் ரோட்டில் 10 கிமீ துாரத்தில் அமைந்துள்ளது பொன்னையன்பட்டி கிராமம்.


 இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராம எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு, இக்கிராம மக்கள் சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதன்படி பொன்னையன்பட்டி கிராமத்தில் மாடி வீடுகளே கிடையாது. தரைத்தளத்துடன் கூடிய வீடுகளில் மொட்டை மாடியுடன் வீடு கட்டி முடிக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் வாழ்ந்த முன்னோர்கள் விதித்த கட்டுப்பாடே, கிராமத்தில் யாரும் மாடி வீடு கட்டக்கூடாது என்பதுதானாம்.


இதுகுறித்து பொன்னையன்பட்டி கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா கூறுகையில், ‘‘எங்கள் ஊர் காவல் தெய்வமான கருப்பசாமி எல்லை வரையில் யாருமே மாடி அமைக்க மாட்டோம்.


 அதனை மீறி மாடி வீடு கட்டினால் கட்டிடம் சேதமடைந்து விடும். அல்லது கட்டியவர்கள் ஊரில் இருக்க முடியாது என்பது நம்பிக்கை’’ என்றார்.


 இதே கிராமத்தை சேர்ந்த அருள்ஜோதி கூறுகையில், ‘‘ஊரின் கண்மாய்கரையில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் காவல் தெய்வமாக உள்ளது.


கோயிலின் உயரத்தை தாண்டி வீடு அமைந்து விடக்கூடாது என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மாடிவீடு கட்டுவதில்லை.

இதே போல் எங்கள் ஊர் மக்கள் கிராமத்தை விட்டு வெளியே சென்று வரும்போது கோயிலை கடந்து தான் வரவேண்டும். காலில் காலணி அணிந்திருந்தால் அதனை கழற்றி கைகளில் எடுத்து கொண்டு கோயிலை தாண்டிதான் போட்டு கொள்வோம்.


 ஆண்கள் கோயிலை கடந்து செல்லும்போது, துண்டை இடுப்பில் கட்டிசெல்வர். ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் குதிரையில் எங்கள் கிராமத்திற்கு வந்த ஒரு ஆங்கிலேயே அதிகாரி மிகவும் கர்வமாக கோயிலை தாண்டி சென்றுள்ளார்.


சிறிது நேரத்தில் அவர் சென்ற குதிரை தடுமாறி விழவே, அவரே அச்சமடைந்து கிராமத்தினை விட்டு சென்றதாக, எங்கள் கிராமத்தினை பற்றி பெரியவர்கள் கூறியுள்ளனர்’’ என்றார்.

அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள இந்த காலத்தில் கூட கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையால், மாடி வீடுகள் எதுவும் வாழ்ந்து வரும் பொன்னையன்பட்டி கிராமம் ஒரு அதிசய கிராமமாகவே திகழ்கிறது.

No comments:

Post a Comment