பொறியியல் கலந்தாய்வு: அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே விரும்பும் மாணவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

பொறியியல் கலந்தாய்வு: அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே விரும்பும் மாணவர்கள்

பொறியியல் கலந்தாய்யில் நடப்பு ஆண்டில், அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி களில் படிக்கும் மாணவர்களே அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர், அவர்களுக்கே வேலைவாய்ப் பிலும் முன்னுரிமை கிடைக்கிறது என்பதால், மாணவர்கள் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து வருவதாக பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்து உள்ளர்.

தற்போது தமிழகத்தில் பொறியியல் ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் பிடித்தமான படிப்பை தேர்வு செய்து வருகிறார்கள்.

இதில் முதல் சுற்று கலந்தாய்வின்போது, கல்லூரகளின் உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்து பெரும்பாலோனோர் தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்,

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முதல் சுற்றின் முடிவில் 30% கூடுதல் சேர்க்கை தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த . 2018 ஆம் ஆண்டில், பல மாணவர்கள் முதல் சுற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அதன்கீழ் உள்ள கல்லூரிகளைளே ரும்பினர். அதுபோல 'கடந்த ஆண்டு முதல் சுற்று முடிவில் சுமார் 60 மாணவர்களைப் பெற்ற ஒரு கல்லூரி, இந்த ஆண்டு 90 க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பெற்றுள்ளது என்றும் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.

ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி உள்பட சில கல்லூரிகள் குறித்து, அங்கு படிக்கும் பழைய மாணவர்கள் அளித்த பின்னூட்டத்தின் அடிப்படையில், தற்போது கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், அதுபோன்ற நல்ல தனியார் கல்லூரிகளை தேர்வு செய்வதையே இது காட்டுகிறது என்றும் கூறி உள்ளார்.

தற்போது தனியார் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல் பொறியியல் மற்றும் தகவல் வியல் பாடங்களை விரும்பி ஏற்றுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின்போது, ஒதுக்கப்பட்ட 6,740 மாணவர்களில், 24% மாணவர்கள், கணினி அறிவியல் மற்றும் 20% பேர் மின்னணு மற்றும் தகவல்தொடர்பு தேர்வு செய்தனர். ஆச்சரியப்படும் விதமாக, 10% மாணவர்கள் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்தனர், அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் படிப்புகளில் 9% பேர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

'இந்த ஆண்டு மாணவர்களின் விருப்பம் கணினி அறிவியல் என்பது தெளிவாகி உள்ளது. இதுவரை 1,640 மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துள்ளதாகவும், மெக்கானிக்கல் துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 900ம் இருந்தது, இந்த ஆண்டு 685 ஆகக் குறைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், ஐ.டி.யைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 450 ஆக இருந்தது இந்த ஆண்டு 650 ஆக உயர்ந்து இருப்பதாகவும் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்து உள்ளார்.

பொறியியல் படிப்புக்கான முதல்சுற்று கலந்தாய்வுக்கு 9,872 மாணவர்கள் அழைக்கப்பட்டாலும், 7,705 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், அவர்களில், 6,740 பேர் மட்டுமே தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

2வது சுற்று கலந்தாய்வுக்கு 177.75 முதல் 150 மதிப்பெண்கள் பெற்ற சுமார் 30,053 மாணவர்கள் அழைக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டாவது சுற்றுக்கான தற்காலிக தரவரிசை பட்டியல் ஜூலை 16ந்தேதி (நாளை) வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டை போல் அல்லாமல் இந்த ஆண்டு 178 க்கும் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்களு டன் OC மற்றும் BC ஐச் சேர்ந்த மாணவர்கள், அரசு பொறியியல்கல்லூரி உள்பட தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொறியியல கலந்தாய்வு ஜூலை 28ம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment