இன்ஜினியரிங் கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மே 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான ரேண்டம் என் ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. ஜூன் 17ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
ஜூன் 25 முதல் 28ம் தேதி வரை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கும் சென்னையில் நேரடி கலந்தாய்வு நடந்தது. இதைத்தொடர்ந்து, இன்று முதல் தரவரிசை பட்டியல் அடிப்படையிலான இணையவழி கலந்தாய்வு நடை பெற உள்ளது.
அதன்படி, தரவரிசை பட்டியலில் முதல் ரேங்க் முதல் 9,872 ரேங்க் வரை பெற்றவர்கள் தங்களுக்கான விருப்பக்கல்லூரியை தேர்வு செய்யலாம்.
இன்று முதல் ஜூலை 10ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விருப்பக்கல்லூரிகள் பட்டியலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்
. 42 இன்ஜினியரிங் கலந்தாய்வு உதவி மையங்களிலும் மாணவர்கள் விருப்பக்கல்லூரி பட்டியலை உள்ளீடு செய்யலாம்.
ஜூலை 11ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கல்லூரிகளில் சேருவதை மாணவர்கள் ஜூலை 12ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிபடுத்த வேண்டும்.
ஜூலை 13ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரி தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கவும் தகுதி பெறுவார்கள்.
ஜூலை 28ம் தேதிக்குள் 4 சுற்றுக்களாக கலந்தாய்வு நடத்தி முடிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment