பி..இ. கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

பி..இ. கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு

பி..இ. பொதுப் பிரிவு மற்றும் துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பணம் செலுத்தி, கலந்துகொள்ளத் தவறியவர்களுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


நான்கு சுற்றுகளாக நடந்துமுடிந்த ஆன்லைன் கலந்தாய்வு மற்றும் துணைக் கலந்தாய்வுக்கு முன்பணம் செலுத்திவிட்டு, கலந்தாய்வில் பங்கேற்காதவர்களுக்கும், கல்லூரி மற்றும் பாடப் பிரிவில் இடம் ஒதுக்கப்படாத மாணவர்களுக்கும் இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


 இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044- 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment