ஆசிரியருடன் ஒரு செல்ஃபி" - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

ஆசிரியருடன் ஒரு செல்ஃபி" - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை

பல கல்லூரிகளில் செல்ஃபோன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆசிரியர்களுடன் மாணவர்கள் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு தெரிவித்துள்ளது.


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் போக்ரியல் நிஷான்க், குரு பூர்ணிமாவை முன்னிட்டு SelfiwithGuru என்ற ஹேஷ்டேக்கைத் தொடங்கி வைத்தார்அதைத்தொடர்ந்து, பல்கலைக் கழகங்களுக்கான மானியக் குழு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது


அதில், மாணவர்கள் தங்கள் ஆசிரியருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.


சென்னை உள்பட பல பகுதிகளில் கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியருடன் எப்படி செல்ஃபி எடுப்பது எனத் தெரியாமல் மாணவர்கள் குழம்பினர்.


 ஆனாலும் பல்வேறு தரப்பு மாணவர்களும் தங்களது ஆசிரியருடன் புகைப்படங்கள் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்


No comments:

Post a Comment