யு.ஜி.சி., விதிப்படி அலுவலர்கள் மீது நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

யு.ஜி.சி., விதிப்படி அலுவலர்கள் மீது நடவடிக்கை

அரசு கலைக் கல்லுாரிகளில் உதவிப் போராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் யு.ஜி.சி.,யின் விதிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

விதிமீறலில் ஈடுபடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது


.பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) 2009ல் வகுத்துள்ள விதிமுறைகளை (எம்.பில்.,/பி.எச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்) பின்பற்றி, தமிழகத்தில் அரசு கலைக் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள உத்தரவிடக்கோரி, மதுரை விஸ்வநாதபுரம் ராஜேஷ் உட்பட சிலர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்


நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு:


நியமனத்தில் குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்பன உட்பட யு.ஜி.சி.,யின் இதர விதிமுறைகளை நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். முழுநேர கல்லுாரிகளுக்கு (ரெகுலர்) செல்லாமல் திறந்தவெளி பல்கலை, தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள் யு.ஜி.சி.,யின் விதிகள்படி, சந்தேகத்திற்கிடமின்றி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள்.


முழு நேரக் கல்லுாரிகளில் முறையாக பட்டம் பெற்றவர்களை மட்டுமே உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்

அரசு கலைக் கல்லுாரிகளில் உதவிப் போராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் யு.ஜி.சி.,யின் விதிமுறைகளை பின்பற்ற தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் விதிமீறல் இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உதவிப் பேராசிரியர்கள் நியமனம் யு.ஜி.சி., விதிகள்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். மனுக்களை பைசல் செய்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டார்

No comments:

Post a Comment