இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் விண்ணப்பம் விநியோகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 18, 2019

இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் விண்ணப்பம் விநியோகம்

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

 இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் தொடர்பாக இன்று அறிவிக்கை வெளியிடப்படும்

. பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத்துணைத்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் இன்ஜினியரிங் துணை கவுன்சலிங்குக்கு ஜூலை 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 இதற்காக 46 இன்ஜினியரிங் உதவி மையங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள்.

 மாணவர்கள் தங்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்டை தெரியாத நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

இணைதளம் மூலம் விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

 அதைத்தொடர்ந்து சென்னை தரமணியில் உள்ள சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூலை 28ம் தேதி முதல் துணை கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் கவுன்சலிங் நடைபெற உள்ளது.

 இவ்வாறு தொழில்நுட்பகல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment