அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன் கட்டிய அம்மன் கோவில்... - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன் கட்டிய அம்மன் கோவில்...

தமிழில் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடிக்கும் முடிவில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட  நடிகர் நெப்போலியன் ஒரு வேண்டுதலின் பொருட்டு அங்கே ஒரு அம்மன் கோவில் கட்டியிருக்கிறாராம்

தமிழக அரசியலிலும், சினிமாவில் பிசியாக இயங்கி வந்த நடிகர் நெப்போலியன் கடைசியாக தமிழில் 'முத்துராமலிங்கம்'என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

அவர் அமெரிக்காவில் செட்டில் ஆனதற்கு முக்கிய காரணமே தனது மகனுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்குவதற்குத்தான்.


 அந்த சிகிச்சையில் தனது மகன் ஓரளவுக்குத் தேறி வந்த நிலையில் மகன் குணமடையும் சமயம் தான் வசிக்கும் பகுதியில் ஒரு அம்மன் கோவில் கட்டவேண்டும் என்ற வேண்டுதல் இருந்ததாம்.

அதை மறக்காத நெப்போலியன் சமீபத்தில் தான் வசிக்கும் பகுதியில் ஒரு அம்மன் கோயில் கட்டி முடித்தாராம்.


முதலில் தமிழர்கள் மட்டுமே வழிபட்டு வந்த அந்த அம்மன் கோவிலுக்கு தற்போது அமெரிக்க பக்தர்களும் வந்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

அதைப் பூரிப்போடு சென்னைக்கு இரு தினங்களுக்கு வருகை தந்த நெப்போலியன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். தற்போது நெப்போலியன் 'டெவில்ஸ் நைட்','கிறிஸ்மஸ் கூப்பன்' ஆகிய இரு ஹாலிவுட் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment