தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியனுக்கு கூடுதல் பொறுப்புகளை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் பாண்டியன்(44), 2000ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி.
வி.கே.பாண்டியன் என சுருக்கமாக அழைக்கப்படுகிறார். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டு கலெக்டராக பணியாற்றினார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை இவர் சிறப்பாக அமல்படுத்தினார்.
இதனால் இந்த மாவட்டம் சிறப்பாக செயல்படும் மாவட்டமாக தேர்வு செய்யப்ப்டது. கஞ்சம் மாவட்டம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொந்த மாவட்டம். இதனால் பாண்டியனின் பணிகள் நவீன் பட்நாயக்கை கவர்ந்தது.
கடந்த 2011ம் ஆண்டு இவரை தனது தனிச் செயலாளராக ஆக்கினார். முதல்வர் கொடுக்கும் பணிகளை எல்லாம் இவர் சிறப்பாக செய்ததால், நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய அதிகாரியானார். இவரை ‘சூப்பர் முதல்வர், பிஜூ ஜனதா தள கட்சியின் செயற் தலைவர்’ என்று பா.ஜ கட்சி தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கினார்.
ஆனால் எதையும் கண்டுக் கொள்ளாமல், தனது பணியை திறம்பட பாண்டியன் செய்து வந்தார். ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்ற நவீன் பட்நாயக், ‘‘வெளிப்படைத்தன்மை, குழுவாக செயல்படுதல், தொழில்நுட்பம், நேரம் மற்றும் மாற்றம் என்ற 5டி மந்திரத்தை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்
. இந்த 5டி பணிகளையும் தனது தனிச் செயலாளர் பாண்டியனிடம், முதல்வர் நவீன் பட்நாயக் தற்போது கூடுதலாக வழங்கியுள்ளார். இதனால் ஒடிசாவின் மிக முக்கியமான உயர் அதிகாரியாக பாண்டியன் மாறியுள்ளார்.

No comments:
Post a Comment