பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 14, 2019

பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பெருபாலான பள்ளிகள், அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


 பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், 4,040 மேல்நிலை பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமலுக்கு வந்துள்ளது.


இதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேட்டில் தங்கது வருகையை பதிவு செய்து வருகின்றனர்.

இதன் மூலம் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் காலதாமதமாக வருவது குறைந்துள்ளது.


மேலும் ஆதாரில் உள்ள முழுவிவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள், இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும் தனி சாப்ட்வேரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


 எனவே தலைநகர் சென்னையில் இருந்தபடியே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் வருகை பதிவேட்டு விவரங்களை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 இந்நிலையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை பயன்படுத்தாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது

No comments:

Post a Comment