பிளஸ்டூ முடித்தவர்கள் இந்திய கடற்படையில் சேரலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

பிளஸ்டூ முடித்தவர்கள் இந்திய கடற்படையில் சேரலாம்!

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய Sailor எனப்படும் மாலுமி பணிக்கான பிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பணிகள்: மாலுமி
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் (Artificer Apprentice) (AA)
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் (Senior Secondary Recruit) (SSR)

காலியிடங்கள்:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 500
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 2,200
மொத்தம் = 2,700 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.06.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2019

வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்புவோர் 01.02.2000 மற்றும் 31.01.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.205
குறிப்பு:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது

ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும்

கல்வித்தகுதி:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 60%மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.joinindiannavy.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்றுவிண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. கணினி வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. மருத்துவ தகுதி தேர்வு

பயிற்சிக் காலம்:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 9 வாரங்கள்
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 22 வாரங்கள்

ஊக்கத்தொகை:
தொடக்கக்கால பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி முடிவுக்கு பின் பல்வேறு சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/AA-SSR_022020.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment