ஏழை எளியோர்களின் பசியை தீர்க்கும் உணவுப்பெட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

ஏழை எளியோர்களின் பசியை தீர்க்கும் உணவுப்பெட்டி

நெல்லையில் ஏழை எளியோர்களின் பசியை தீர்க்கும் வகையில், தனியார் அமைப்பு மூலம் உணவு பெட்டி வைக்கப்பட்டு, அதனுள் உணவு பொட்டலங்களை வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உணவின்றி பசியால் வாடும் ஏழை எளியோரின் நலனை கருத்தில் கொண்டு, பசியில்லா நெல்லை என்ற அமைப்பு மூலம் இந்த உணவு பெட்டி நெல்லை மஹாராஜா நகரில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு நாள்தோறும் சுமார் நூறு உணவு பொட்டலங்கள் தனியார் அமைப்பு மூலம் வைக்கப்பட இருக்கிறது. பசி எடுக்கும் எவரேனும் உணவுகளை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாது பிஸ்கெட் பாக்கெட், கூல்டிரிங்ஸ் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன. வீணாக கொட்டப்படும் உணவுகளையும், உணவு பொருட்களையும் பொதுமக்கள் விருப்பபட்டால் இங்கு வைத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment