அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நாளைய கலாம்’ விருது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நாளைய கலாம்’ விருது

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில், ‘‘நாளைய கலாம்’’ விருது வழங்கப்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில்  தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 2 பள்ளி மாணவர்களுக்கு, ‘‘நாளைய கலாம்’’ விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.


இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அங்கம்பாக்கம் ஊராட்சி  நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் ஆர்.விமல்ராஜ் மற்றும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் ஆர்.பிரவீன்குமாருக்கும், ‘‘நாளைய கலாம்’’ விருது வழங்கப்பட்டது.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா, சமத்துவ வழக்கறிஞர் சங்க நிறுவனர் பார்வேந்தன், காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் - நிறுவனர் லாரன்ஸ் ஆகியோர் விருது வழங்கினர்.


இந்நிகழ்வில் அங்கம்பாக்கம் பள்ளி தலைமையாசிரியர் தணிகைஅரசு, அறிவியல் ஆசிரியர் சேகர், ஆசிரியர் சரவணன், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment