வாட்ஸ் அப் போன்ற மெசேஜ் செயலிகள் மனதளவில் பயனாளர்களின் ஆரோக்கியத்துக்கு உதவுவதாக ஆய்வு தெரிவிக்கிறது
உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று.
செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. குறிப்பாக நண்பர்களுடன் அரட்டை, குரூப்கள் தொடங்கப்பட்ட அரட்டை என வாட்ஸ் அப் ஒரு அரட்டை தளமாகவும் இயங்கி வருகிறது.
இளைஞர்கள் அதிக நேரத்தை சமூக வலைதளங்களில் செலவழிப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அது உண்மைதான் என்றாலும் வாட்ஸ் அப் பயன்பாட்டால் சில நன்மைகளும் உண்டு என்கிறது ஒரு ஆய்வு
இண்டர்னேஷ்னல் ஜார்னல் ஆஃப் ஹியூமன் கம்யூட்டர் ஸ்டடிஸ் (International Journal of Human-Computer Studies) வெளியிட்டுள்ள தகவலின்படி சாட் செய்யும் வசதிகொண்ட செயலிகள் குரூப் சாட் மற்றும் தனிநபர் உடனான சாட்களுக்கு வழிவகை செய்கின்றன
இந்த சாட்கள் மூலம் எப்பொழுதும் நண்பர்களுடன் பேச வாய்ப்பு கிடைப்பதால் மனதளவில்அவர்கள் தனிமையை உணராமல் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது
இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்தின் எட்ஜ் கில் யுனிவெர்சிட்டி பேராசிரியர் லிண்டா கயே '' சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவழிப்பது அபாயகரமாக மாறி வருவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அது அந்த அளவுக்கு அபாயமானதாக இல்லை.
அருகில் இல்லாத குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் பேசி கருத்துகளை பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் மாதிரியான மெசேஜ் ஆப்கள் உதவுகின்றன. இது தனிமை உணர்வை போக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அருகில் இல்லாதவர்களுடன் கூட பேசி மன அளவில் இலகுவாக உணர வைக்க வாட்ஸ் அப் உதவுகிறது என ஆய்வு சொல்வது உண்மை என்றாலும், இதே சமூக வலைதளங்கள் அருகில் இருப்பவர்களையும் கண்டுகொள்ளாத அளவுக்கு மாற்றி வருவது மறுக்கமுடியாத உண்மை.
எனவே நம் தேவைக்கு ஏற்ப சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்துவதே நம் உடலுக்கும், மனதுக்கும் நல்லது எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

No comments:
Post a Comment