இலவச மடிகக்ணினி தாமதம் ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

இலவச மடிகக்ணினி தாமதம் ஏன்?

போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவே, நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மடிகணினி வழங்கப்படுகிறது' என, அரசு சிறப்பு திட்ட செயலாக்க கூடுதல் முதன்மை செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.


 கடந்த, 2017- - 18 மற்றும் 2018- - 19ல், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, இன்னும் மடிக்கணினி வழங்கவில்லை. அந்த மாணவர்கள் போராடி வருகின்றனர்.


இது குறித்து, அரசு சிறப்பு திட்ட செயலாக்க கூடுதல் முதன்மை செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


அரசு, 15.53 லட்சம் மடிக்கணினிகளை, மாணவர்களுக்கு ஒதுக்கி உள்ளது

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, முன்னுரிமை அளித்து வழங்குகிறோம்


.இம்மாணவர்கள், ஜெ.இ.இ., - 'நீட்' போன்ற போட்டி தேர்வுக்கு தேவையான, வினா வங்கிகளை, 'கியூ.ஆர்.கோடு' மூலம் பதிவிறக்கம் செய்து, மடிக்கணினியில் படிக்கலாம். இதற்காகவே, முதல், இரண்டு கட்டங்களாக, அவர்களுக்கு வழங்கப்படுகிறது.


 மூன்றாம் கட்டமாக, 2018 - - 19ல், பிளஸ் 2 முடித்தோருக்கும், நான்காம் கட்டமாக, 2017- - 18ல் முடித்தோருக்கும் வழங்கப்படும். எனவே, அந்த மாணவர்கள், போராட்டத்தை தவிர்க்குமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment