அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கான தரவரிசை பட்டியலை, துணைவேந்தர் முருகேசன் வெளியிட்டார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், வேளாண் புலம் இளநிலை அறிவியல் வேளாண்மை (பி.எஸ்சி., அக்ரி), இளநிலை அறிவியல் தோட்டக்கலை (பி.எஸ்சி., ஹார்ட்டிகல்சர்) மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கு, தரவரிசை பட்டியலை துணைவேந்தர் முருகேசன் வெளியிட்டார்.பி.எஸ்சி., வேளாண்மைக்கு 12,374 பேரும், பி.எஸ்சி., வேளாண்மை சுய நிதி பிரிவில் 3,281; பி.எஸ்சி., தோட்டக்கலை-1,763; டிப்ளமோ வேளாண்மை - 1214, டிப்ளமோ தோட்டக்கலை - 599 பேர் என, மொத்தம் 19,231 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்தகுதி இல்லாத 465 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 18,766 மாணவர்களுக்கு சமவாய்ப்பு (ரேண்டம் எண்) எண் வெளியிடப்பட்டது.
நேற்று காலை, மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை, துணைவேந்தர் முருகேசன் இணைய தளத்தில் வெளியிட்டார்.
தரவரிசை பட்டியலில், கன்னியாகுமரி மாணவி ரேவதி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று, முதல் இடம், தருமபுரி மாணவர் சுரேஷ் 195.25 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தனர்.
சிதம்பரம் மாணவி சவுமியா 194 கட் ஆப் மதிப்பெண்களுடன் சுயநிதி பிரிவில் முதலிடம், புதுக்கோட்டை மாணவி பிரின்சி 189, மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், சிதம்பரம் மாணவி அருணா 189 மதிப்பெண்களுடன், மூன்றாம் இடம் பிடித்தனர்.
வேளாண், தோட்டக்கலை பாடத்தில் வொக்கேஷனல் பிரிவு, டிப்ளமோ வேளாண்மை, டிப்ளமோ தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளில் முதல் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டது
.துணை வேந்தர் முருகேசன் கூறியதாவது:
மாணவர்கள் ரேங்க் பட்டியலை www.annamalai university.sc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கவுன்சிலிங் முறையில், முற்றிலும் தகுதி அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
பிளஸ் 2 அல்லது இதற்கு இணையான படிப்பு மதிப்பெண்கள், அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரித்து கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர்.மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
பி.எஸ்சி., வேளாண்மையில், அரசு உதவி பெறும் பிரிவில் 500 மாணவர்கள், சுயநிதி பிரிவில் 700 மாணவர்கள், பி,எஸ்சி., தோட்டக்கலையில் 100, டிப்ளமோ வேளாண்மையில் 100, டிப்ளமோ தோட்டக்கலையில் 80 மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. கலந்தாய்வு, வரும் ஆகஸ்ட் 6 அல்லது 7ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பதிவாளர் கிருஷ்ணமோகன், தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி செல்வநாராயணன், மாணவர் சேர்க்கை இயக்குனர் ராம்குமார், வேளாண் புல முதல்வர் சாந்தா கோவிந்த் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment